ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கவுள்ள கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், விண்ணப்பதாரிகளை தெரிவு செய்யும் கிராம உத்தியோகத்தர்களை கண்காணிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகளை நியமித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட விண்ணப்பதாரிகளை தகுதியானவர்களாக நியமிக்குமாறு அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
எனினும் பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக தகுதியற்றவர்களை கிராம உத்தியோகத்தர்கள் தெரிவு செய்வதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனையடுத்தே கிராம உத்தியோகத்தர்களை கண்காணிக்க புலனாய்வு அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.