அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய வழக்கிலிருந்து கோத்தபாய விடுதலை!



தனது தந்தையான டீ.ஏ.ராஜபக்சவுக்கு நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விடுவிக்கப்பட்டுள்ளார்.




இந்த வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வழக்கிலிருந்து ஜனாதிபதியை விடுவிப்பதாக விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்றைய தினம் அறிவித்துள்ளனர்.



Powered by Blogger.