தூக்கி எறியப்படும் யோகேஸ்வரனும் கேள்விக்குறியாகும் கூட்டமைப்பின் இருப்பும்.






யார் என்ன சொன்னாலும் கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்து செல்கின்றது என்பதனை எவராலும் மறுக்க முடியாது.





இச்சரிவுக்குக் காரணம் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளினதும், உறுப்பினர்களினதும் போட்டியும் வெட்டுக், குத்துக்களுமேயாகும்.





மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வாக்கு வங்கியை கொண்டுள்ளவர் யோகேஸ்வரன். கூட்டமைப்பின் கடந்த கால வெற்றியின் பெரும்பங்கு யோகேஸ்வரனையே சாரும்.





சிறிநேசனைவிட மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் அதிக வாக்குகளைக் கொண்டவர் யோகேஸ்வரன்.







ஆனால் யோகேஸ்வரனுக்கு கட்சியில் இடம்கொடுக்காத நிலை ஏற்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யோகேஸ்வரனுக்கு இடம் கொடுப்பதில்லை எனும் நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சியினர் உள்ளனர்.





யோகேஸ்வரனின் இடத்திற்கு தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கத்திற்கு வழங்கப்படவுள்ளது. 





மக்கள் செல்வாக்கும் அதிக வாக்குப் பலமுள்ளவர்களை ஓரம்கட்டி மக்கள் மத்தியில் செல்வாக்கற்றவர்களை போட்டியிட வைப்பது கூட்டமைப்பின் இருப்பை கேள்விக்குறியாக்கும்.





அதேபோல் யோகேஸ்வரனுக்கு இடம்கொடுக்காவிட்டால் பாரிய உடைவையும், பின்னடைவையும் கூட்டமைப்பு சந்திக்கும்.



Powered by Blogger.