ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச அமைப்பாளர் சுமன் தலைமையிலும் மகளிரணி செயலாளர் செல்வி மனோகர் தலைமையிலும் இன்று தேர்தல் பிரச்சார பணிகள் மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வீடுகள் தோறும் பிரச்சாரப் பணிகளுக்காக நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கோட்டபாய ராஜபக்ஷ அவர்களுக்கு இம்முறை வாக்களிக்க இருப்பதாகவும், இந்த தேர்தலில் தமிழர்கள் கிழக்குமாகாண தின் இருப்பை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே தாங்கள் கோத்தபாய ராஜபக்ஷவின் மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்க இருப்பதாகவும் மக்கள் தெரிவிப்பதாக கட்சியின் பிரதேச அமைப்பாளர் சுமன் தெரிவித்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது கட்சியின் பொதுச்செயலாளர் பூ. பிரசாந்தன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்