கிங்ஸ்லி இராசநாயகத்தின் கொலை தொடர்பில் விசாரணை செய்யப்படவேண்டும்








கிழக்கிலே பல புத்திஜீவிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அக் கொலைகளுக்கான விசாரணைகள்
முன்னெடுக்கப்படவில்லை. அவர்களின் குடும்பங்களுக்கான நீதி கிடைக்கவில்லை.குடும்பங்களுக்கான
நீதி கிடைக்கவில்லை.







அமைய இருக்கின்ற ஆட்சியிலாவது விசாரணைகள் நடைபெறுமா?


பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி இராசநாயகம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். அவரின்
படுகொலையைத் தொடர்ந்து உடனடியாகவே அரியநேந்திரன் அவர்கள் அந்த இடத்திற்கு நியமனமாகின்றார்.


கிங்ஸ்லி இராசநாயகத்தின் கொலைக்கும் அரிய நேத்திரனுக்கும் தொடர்பு இருப்பதாக இன்று
பேசப்படுகின்றது.




2004ம் ஆண்டு தேர்தலில் மட்டக்களப்பு தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி இராசநாயகம் வெற்றி பெற்றிருந்தார். அவரின் சகபாடியாகிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் திரு இராசநாயகத்தை பாராளுமன்ற செயலாளரிடம் கூட்டிச் சென்று அவரின் இராஜினாமா கடிதத்தினை கையளிக்க வைத்தார். இதனை தொடர்ந்து திரு இராசநாயகம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். யாரோ சிலரின் மீது கொண்ட அச்சம் காரணமாக இவ்விடயம் இலகுவாக மறக்கப்பட்டுவிட்டது.


தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழரசு கட்சி ஆகிய இரு கட்சிகளின் நிர்வாக சபை உறுப்பினர்கள் சம்மந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் இக்குற்றவியல் செயல்பாடுகளிற்கு பொறுப்புகூற வேண்டியவர்களாவர். ஆகவே என்னால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில தரவுகளை வைத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கை எடுத்து இலங்கையின் நீதி நிர்வாகத்தில் மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் தரவுகள்:








1. திரு கிங்ஸ்லி இராசநாயகம் என்பவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியாகிய தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதியாக தெரிவானவர்.


2. திரு கிங்ஸ்லி இராசநாயகம் அவர்கள் பதவியை துறக்குமாறு ஏன் கேட்கப்பட்டார்? யாரால்?


3. அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரால் பதவி விலகும்படி கேட்கப்படாவிட்டால் யாரால் கோரப்பட்டார்?


4. இராசநாயகம் என்பவரின் படுகொலை பற்றி அறிந்தவுடன் .தே.கூட்டமைப்பு கௌரவ சபாநாயகரிடம் ஏன் தெரிவிக்கப்படவில்லை. வெற்றான பதவி ஏன் நிரப்பாது தடுக்கப்படவில்லை.


5. யாருடைய வேண்டுதலுக்கமைய .தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு இராசநாயகம் அவர்களை பாராளுமன்ற செயலாளர் நாயகம் அவர்களிடம் அழைத்து சென்றார்?


6. இராசநாயகம் படுகொலை செய்யப்பட்ட வேளை இவர்கள் எடுத்த நடவடிக்கைதான் என்ன?


7. எவராகிலும் ஒருவர் இது விடயமாக ஏதும் நடவடிக்கை எடுத்தார்களா?


8. சட்டம் இடங்கொடுத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்மந்தப்பட்ட உறுப்பினர்கள் இப்பிரச்சினை தீரும்வரை சபை நடவடிக்கைகளினின்றும் இடைநிறுத்த முடியும.;


9. பாராளுமன்றம் ஒரு உப குழுவை நியமித்து விசாரணை செய்து சட்ட நடவடிக்கைக்காக சிபார்சு வழங்கலாம.;






இக் கொலை தொடர்பில் பல தடவைக் கொழும்பு 4ம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள்
இடம்பெற்று வந்தது.


நல்லாட்சி அரசாங்கம் இவ் விசாரணைகளை இடைநிறுத்தியிருந்தது.


புதிய ஜனாதிபதி விசாரணைகளை ஆரம்பித்து சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவாரா? 






Powered by Blogger.