எங்கள் வாக்கை காணவில்லை? மட்டக்களப்பில் தேடும் கட்சிகள்


நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பில் 10 கட்சிகள் சேர்ந்து கோட்டாபாஜ ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்கினார்கள்.

ஓரிரு கட்சிகளைத் தவிர ஏனைய கட்சிகளை மக்களுக்கு தெரியவே தெரியாது.

தேர்தல் பிரச்சாரத்திற்கு 10 பேரை திரட்ட முடியாத மிகப்பெரும் கட்சிகளும் அதில் உண்டு.

இவர்களுக்குள் அடிக்கடி பனிப்போர் இடம்பெற்றதாகவும் அறிய முடிகிறது.


ஒருவரை ஒருவர் மஹிந்த அணியிடம் போட்டுக்கொடுத்த கதைகளும் இடம்பெற்றிருக்கின்றது.

இவர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டார்கள் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் மக்களிடம் பிரச்சாரம் செய்யவில்லை என்ற கோபத்தில் மஹிந்த அணி கோபத்தில் உள்ளராம். 

ஏதோ தேர்தல் நடந்துவிட்டது. கோட்டாபாஜ ஜனாதிபதியாகிவிட்டார். 


மட்டக்களப்பிலே கிடைத்த 38000 க்கு மேற்பட்ட வாக்குகள் தங்களுக்குத்தான் கிடைத்தது என்று கூட்டணியில் உள்ள பிரதான கட்சிக்காரர்கள் மார்தட்டிக் கொள்கின்றார்களாம்.கோத்தாவுக்கு வாக்குச் சேர்த்த அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் யார், யார் அவர்களின் மக்கள் செல்வாக்கு என்ன என்பதை மக்களிடமாவது இக் கட்சிகள் கேட்டுத்தெரிந்துகொள்ளவேண்டும்.


Powered by Blogger.