வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்கள் மீண்டும் குடியேற்றப்படவேண்டும் – துரைராஜசிங்கம்


வடக்கிலிருந்து
புலிகளால் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட சகோதர இனமான முஸ்லிம்கள் மீண்டும் குடியேற்றப்படவேண்டும்
என தமிழரசுக் கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்
சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து
தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.பல காலமாக தமிழ்
முஸ்லிம் சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். சில விசமிகளால் இன்று எதிரிகளாக
நிக்கின்றோம்.

வடக்கிலிருந்து
முஸ்லிம்களை புலிகள் இரவோடு இரவாக விரட்டியது தமிழ் முஸ்லிம் மக்களிடையே பகையை ஏற்படுத்தியது.

வடக்கு முஸ்லிம்களை
அவர்களின் சொந்த இடத்தில் குடியேற்றவேண்டும். அவர்களின் பூர்விக நிலத்தில் அவர்களை
நிம்மதியாக வாழ வைக்கவேண்டும்.

சஜித் ராஜபக்சவை
வெற்றிபெற வைப்பதன் மூலமே இரு இனங்களும் ஒற்றுமையாக வாழ முடியும் எனவும் குறிப்பிட்டார்.


Powered by Blogger.