அரச நிறுவனங்களில் புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படக்கூடாது! நிதியமைச்சு உத்தரவு


அரச நிறுவனங்களில் புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படக்கூடாது என்று நிதியமைச்சு உத்தரவிட்டுள்ளது.


அமைச்சுக்களின் செயலர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நியமனங்கள் தொடர்பில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட நியமனங்கள் ரத்துச்செய்யப்படவேண்டும் என்று தேர்தல்கள் ஆணையகம் உத்தரவிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.