ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு தாம் தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்ற போதிலும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சிறுபான்மை மக்கள் வாக்களித்தனர்.
இந்நிலையில் மக்களின் நன்மை கருதி, சமகால ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.