சஜித்தின் மன்னார் பிரசார கூட்ட மேடையில் மனோ-ரிசாட் முறுகல்!



மன்னாரில் இன்று நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டத்தின் போது, அமைச்சர்கள் மனோ கணேசன், ரிசாத்  பதூதீன் ஆகியோரது  அணியினர் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிய வருகிறது.







மன்னார் பிரசார கூட்ட ஏற்பாட்டுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் ரிசாட் பதூதீனின் சகோதரர் ரிஸ்கான் பதூதீனுக்கும், அமைச்சர் மனோவின் ஜனநாயக மக்கள் முன்னணி/தமிழ் முற்போக்கு கூட்டணி வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்திக்கும் இடையிலேயே முறுகல் ஏற்பட்டதாக தெரிய வருகிறது.


மன்னார் கூட்டம் தொடர்பில் பதாகைகள் அமைப்பது, சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற விடயங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்து, மேடையில் ஜனகன் விநாயகமூர்த்திக்கு அமர இடம் ஒதுக்க முடியாது எனவும் மன்னார் முஸ்லிம்களின் புனித பூமி இதில் தமிழர்களுக்கு இடம்கொடுக்க முடியாது எனவும் அமைச்சர் ரிசாட் அணியினர் மறுத்ததை அடுத்து மேடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.






Powered by Blogger.