ரிஷாத் பதியூதின் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல்


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் பயணித்த வாகனத்தின் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்தலம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 5.45 மணியளவில் மதுரன்குளி, கதயாமட்டே பிரதேசத்தில் இந்த கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கல் வீச்சு தாக்குதலில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதின் பயணித்த வாகனத்திற்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் சம்பவத்தினால் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இந்த கற் தாக்குதல் யாரால் மேற்கொள்ளப்பட்டதென்பது இதுவரையில் தெரியவரவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதாகவும் முன்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Powered by Blogger.