சஜித் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத மற்றுமொரு இளைஞன் தற்கொலை
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வி அடைந்தமையை தாங்கிக்கொள்ள முடியாத இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

புத்தல பகுதியை சேர்ந்த 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 19ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் மிகவும் மனவருத்தத்தில் இருந்த அவர் இனி வாழ்ந்து பிரயோசனம் இல்லை என கூறியுள்ளார்.


சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள வீதியில் தனது சைக்கிளை விற்பனை செய்துவிட்டு அதில் கிடைத்த பணத்தில் விஷப்போத்தல் ஒன்றை கொள்வனவு செய்து பருகியுள்ளார்.

அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் காப்பாற்ற முடியாத நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

9 மற்றும் ஒரு வயது பிள்ளைகளை கொண்ட இவரின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும், அவரின் மனைவிக்கு எந்தவித வருமானம் பெறும் தொழிலும் இல்லை என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை சஜித்தின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத இருவர் உயிரிழந்தனர். ஒருவர் தற்கொலை செய்தும் மற்றவர் மாரடைப்பினால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.