42 வருட அரசியல் வாழ்வில் ரணிலின் திடீர் முடிவு? பலரும் குழப்பத்தில்...



முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மனித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.




இது குறித்து ரணில் தனது நெருக்கமானவர்களிடம் இன்று கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 1977ம் ஆண்டு முதன் முதலாக அரசியலில் பிரவேசித்திருந்தார்.


அந்த வகையில் தனது 42 வருட அரசியலுக்கு எதிர்வரும் டிசம்பரில் விடைகொடுக்க தயாராகிவிட்டார் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.


இதேவேளை, கடந்த 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றிருந்தார்.


இதனையடுத்து, அரசாங்கத்தில் இருந்து அமைச்சர்கள் தமது பதவியினை இராஜினாமா செய்திருந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இப்படியான நிலைகள் நீடித்தாலும் ரணில் கட்சியின் பதவியினை விட்டு விலகுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு அப்படி நடந்தால் மட்டுமே நம்ப முடியும் என பலரையும் இந்த செய்தி குழப்பமடைய வைத்துள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன


Powered by Blogger.