மைத்திரியின் ஏகோபித்த தீர்மானத்திற்கெதிரான மனு தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!



இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.







போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாகவும் அண்மையில் தெரிவித்தார்.


அதனையடுத்து, மரண தண்டனையை அமுல்ப்படுத்துவதை தடுக்குமாறு உத்தரவொன்று வௌியிடுமாறு கோரி பல்வேறு தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட 15 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று புவனெக அலுவிஹாரே, எஸ்.துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டது.


இதன்போது, குறித்த நீதியரசர்களால் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை இந்த தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்டுகிறது.


இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


மரண தண்டனை தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஆராய்ந்த மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் கடந்த ஜூலை மாதம் 05 ஆம் திகதி மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி தீர்ப்பளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்து.


Powered by Blogger.