விவாதத்திற்கு நான் தயாராக இருக்கிறேன்! சஜித்திற்கு நாமல் சவால்


சஜித் பிரேமதாச இப்போது ஏதாவது விவாதத்தை தொடங்கினால் அதற்கு தான் தயாராக இருப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் தன்னுடைய டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள நாமல் ராஜபக்ச,

கெளரவ சஜித் பிரேமதாச அவர்களே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச விவாதங்களுக்கு வருவதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் நீங்கள் உங்கள் அறிக்கையை முதலில் வெளியிடுங்கள்.

அந்த அறிக்கை வெளிவந்த பின்னர் இது தொடர்பில் கவனம் செலுத்துவது சிறப்பானதாக இருக்கும். விவாதங்கள் என்று வரும் போது அதற்கென்று ஒரு பொருள் இருக்கிறது.

அதற்கு முன்னர் நீங்கள் ஏதாவது விவாதத்தினை ஏற்படுத்துவது தொடர்பில் வலியுறுத்தினால் நான் தயாராகவே இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Powered by Blogger.