அதிக நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக மாறிய மட்டக்களப்பு நூலக கட்டடம்மஹிந்த - பிள்ளையான் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் மிகப் பெரிய நூலகமாக பிள்ளையானால் அமைக்கப்பட்ட நூலகக் கட்டடமானது ஆட்சி மாற்றத்தினால் இடைநடுவில் கைவிடப்பட்டது.

பிள்ளையான் சிறை வைக்கப்பட்ட பின்னர். எந்தவொரு அரசியல்வாதியும் குறித்த நூலகத்தை நிறைவு செய்யவில்லை.


அது ஒருபுறமிருக்க குறித்த நூலக வளாகம் அதிக நுளம்புகள் பெருகும் இடமாக காட்சியளிக்கின்றது.பழைய ரயர்களும், தொட்டிகளும் பழைய பொருட்களும் களஞ்சியப்படுத்தும் இடமாக இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


ஒரு சமூகத்தின் முதுகெலும்பான கல்விக்காக அமைக்கப்பட்ட வாசிகசாலையானது பழைய பொருட்களை களஞ்சியப்படுத்தும் இடமாகவும் நுளம்புகள் பெருகும் இடமாகவும் இருப்பது வேதனையே.

இவ்விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்துவார்களா?
Powered by Blogger.