வவுனியாவில் நடந்த சஜித் அவர்களின் தேர்தல் பரப்புரையில் தமிழ் மொழியில் ஒரு எழுத்து கூட இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அதை பற்றி எந்த தமிழ் அரசியல்வாதிகளும் கேள்வி எழுப்பவில்லையே ஏன் ?
மஹிந்த தரப்பின் கூட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தால் இன்று தமிழர்கள் மத்தியில் பிரதான பேச்சுப்பொருள் இதுவாக மட்டுமே இருந்திருக்கும்.
தன்னுடைய அமைச்சு வேலைகளை முகநூலிலும் டுவிட்டரில் மட்டும் செய்துவரும் அமைச்சர் மனோ கணேசனும் இந்த பரப்புரை மேடையில் உல்லாச சிரிப்புடன் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிர்வாகத்தில் தமிழ் புறக்கணிக்கப்படுவதற்கு "இரத்தம் கொதிக்கிறது" என அறிக்கை விட்ட அவர், அவரது கூட்டணி கட்சியில் தமிழ் புறக்கணிக்கப்படும் பொழுது பேரானந்தத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளதை அவரின் சிரிப்பில் இருந்து அறியமுடிகிறது