வழங்கப்பட்ட காணியை இடை நிறுத்துங்கள்! மட்டக்களப்பில் கோரிக்கை


மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட இரண்டு பகுதிகளில் மாற்று இனத்தினை சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட காணியை இடைநிறுத்துமாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசசபைக்கு கொண்டுவரப்பட்ட பிரேரணையை சில நிபந்தனைகளை விதித்தபோதிலும் பிரதேசசபையில் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் காணிகள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளுராட்சிமன் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தினை தொடர்ந்து அங்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.இந்த சந்திப்பின்போது மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் இலங்கேஸ்வரி, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் திருநாவுக்கரவு அருண் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.


இஸ்லாமிய நிறுவனம் ஒன்றுக்கு குறித்த சூரிய மின்கலம் தொடர்பான செயற்பாடுகளுக்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காந்திபுரம், பன்சேனை ஆகிய பகுதிகளில் காணிகள் வழங்க வவுணதீவு பிரதேச செயலக அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த காணிகள் பாராளுமன்ற உறுப்பினரால் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இங்கு உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.Powered by Blogger.