பாடசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்! தீவிர பாதுகாப்பில் இராணுவத்தினர்அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றிலிருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய டெனேட்டர்கள் மூன்றும் வெடிமருந்து செய்யப் பயன்படுத்தப்படும் சேவா நூலும் மீட்கப்பட்டுள்ளன.

இதனால் பாடசாலையில் இருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டு பாடசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, குறித்த பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.


நேற்று வழங்கப்பட்ட அரச விடுமுறையை அடுத்து இன்று காலை பாடசாலை திறக்கப்பட்டது.

இதன் பின்னர், பாடசாலை மாணவர்களின் பெற்றோர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது, பொலித்தீன் பையொன்றில் சுற்றப்பட்டவாறு மூன்று டெடனேட்டர்களும், சேவா நூலையும் மீட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தின​ர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தினமும் பெற்றோர் பாதுகாப்பிற்கு நிற்கும் இடத்தில் இந்த பொருட்கள் கிடந்த நிலையில், பாடசாலை கற்கை நடவடிக்கைகளை தடுப்பதற்காக யாராவது சிலரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது பாடசாலையின் பாதுகாப்பிற்காக ஆயுதம் தாங்கிய பொலிஸட அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற 8 இராணுவத்தினரும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்Powered by Blogger.