மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகும் ஹிஸ்புல்லா?கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்த ஹிஸ்புல்லாவை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேல் மாகாண ஆளுநராக மஹிந்த சமரசிங்கவை நியமித்து அந்த இடைவெளிக்கு ஹிஸ்புல்லாவை நியமிக்க ஜனாதிபதிக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


எனினும் ஏற்கனவே மேல் மாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் தீர்மானித்து விட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த ஹிஸ்புல்லாவின் இடைவெளிக்கு மீண்டும் அவரை நியமிக்க சுதந்திர கட்சிக்குள் நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.Powered by Blogger.