ஐ.தே.கவுக்கு புதிய தலைவர்!






ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதியதொரு தலைமைத்துவம் அவசியமாகியுள்ளது என்று அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.


சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பப்பட்ட அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.







இது தொடர்பில் மேலும் கூறியதாவது,





எமது நாட்டுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் புதியதொரு தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. எனவே, புதிய சிந்தனைகள் மற்றும் கொள்கையுடைய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு மக்களுக்கு விரைவில் கிடைக்கும்.





திட்டமிட்ட அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும். எக்காரணம் கொண்டும் அது ஒத்திவைக்கப்படாது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையை மக்களுக்கு நிச்சயம் வழங்குவோம்.





ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மாற்றம் வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. அதை ஏற்படுத்துவதற்கு கட்சிக்குள்ளும், வெளியிலும் அழுத்தங்களை பிரயோகிப்போம். என்றார் அஜித் பி. பெரேரா.


அதேவேளை, சஜித் பிரேமதாசவை முன்னிலைப்படுத்தும் வகையில் அஜித் பி. பெரேராவால் அண்மைக்காலமாக வெளியிடப்பட்டுவரும் கருத்துக்களானது, ஐ.தே.கவிலுள்ள ரணில் ஆதரவு குழுவை அதிருப்தியடைய செய்துள்ளது என சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.


Powered by Blogger.