பிரதமரின் அதிமுக்கிய செய்தியுடன் கல்முனை நோக்கி பயணிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பலர்






கல்முனை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தமிழர்களின் கோரிக்கைக்கு சாதனமான நிலைப்பாட்டை பிரதமர் ரணில் விக்ரம்சிங்க வெளிப்படுத்தியுள்ளார்.





கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான அதிமுக்கிய தகவல்களுடன் அரசாங்கத்தின் பிரதான அமைச்சர்கள் இருவர் கல்முனை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.










இந்நிலையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது குறித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சார் எம்.எ.சுமந்திரன், அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் தயாகமகே ஆகியோர் தற்போது கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.


அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


எனினும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு அந்தப் பகுதி முஸ்லிம் மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.





தமிழர்களின் கோரிக்கைக்கு எதிராக முஸ்லிம் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் கல்முனை பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.