ஹக்கீமின் நாடாளுமன்ற தெரிவுக் குழு உறுப்பினர் பதவிக்கும் வருகிறது ஆப்பு! ஹக்கீம் எடுக்கப்போகும் முடிவு என்ன?



ஸ்ரீலங்காவில் மிகவும் கொடூரமான முறையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என பொதுமக்களை இலக்கு வைத்து தொடர் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தங்களை செய்திருந்ததாக நாடாளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் ஹிஸ்புல்லாஹ் கூறியிருப்பதால், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து ரவூப் ஹக்கீம் விலக வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




அந்தக் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.


இதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, இன்றிலிருந்து சரியாக 154 நாட்களுக்குப் பின்னர் அதாவது 23.11.2019 அன்று ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்திருந்தார்.


அத்துடன் ஜனாதிபதி தேர்தலை ஒருபோதும் காலம் தாழ்த்த முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
Powered by Blogger.