மைத்திரி விடுத்த கடுமையான எச்சரிக்கைக்கு தக்க பதிலடி கொடுத்துள்ள பொன்சேகா! வெல்லப் போவது யார்?



நாட்டில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலைத் தாக்குதலையடுத்து தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.


அதனையடுத்து அவர்கள் பதவி விலக வேண்டும் என கோரி பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு, கண்டி தலதா மாளிகை முன்பாக அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றையும் ஆரம்ப்பித்திருந்தார்.


அதனையடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை துறந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகித்து வருகின்றனர். இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற தெரிவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.


அதனூடாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் உயர் பதவிகளில் இருப்பவர்கள் என அகைவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன்போதே ஜனாதிபதி இவ்வாறு விசாரணைக் குழு முன்னிலையில் விசாரணைகள் நடைபெறுவதால் இரகசியங்கள் வெளியாவதாகவும், இதனை வைத்து ஐக்கிய தேசிய கட்சி அரசியல் நடத்துவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.


அத்துடன் இந்த தெரிவுக் குழு விசாரணைகள் நடைபெறக் கூடாது எனவும் அவ்வாறு நடந்தால் தான் அமைச்சரவை கூட்டம் மற்றும் அரச நிகழ்வுகள் எதிலும் பங்குபற்றப் போவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். உடனடியாக விசாரணைகளை நிறுத்துமாறும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.


மைத்திரியின் இந்த எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சரத்பொன்சேகா கருத்துத் தெரிவிக்கையில்,




உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் சபாநாயகரால் விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. அது நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்துக்கு அமையவே முன்னெடுக்கப்படுகின்றது.


அதன் செயற்பாடுகளை ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கேற்ப மாற்ற முடியாது என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் விசேட தெரிவுக்குழுவின் உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


களனிப் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


ஆகவே நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து அழுத்தம் கொடுப்பதற்கு ஜனாதிபதியால் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


அத்துடன் தெரிவுக் குழுவின் விசாரணை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் உண்மை எதுவென்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


Powered by Blogger.