தற்கொலை தாக்குதல்! முக்கிய தீவிரவாதி உயிருடன் இருப்பதாக பொலிஸார் அறிவிப்பு


கடந்த ஞாயிற்றுகிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் முக்கிய தீவிரவாதியான மொஹமட் காசிம் சஹ்ரான் இன்னமும் உயிருடன் இருப்பதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஷங்கிரிலா ஹோட்டலுக்கு அவர் குண்டுத்தாரியாக வந்ததாக இதற்கு முன்னர் செய்தி வெளியாகியது. எனினும் குண்டுத்தாரியின் புகைப்படத்திற்கும் மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரானிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரியவந்துள்ளது.இதற்கு முன்னர் மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பௌத்த சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவத்திற்கு மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரான் என்பவர் தொடர்புபட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இருவர் அதற்கு தொடர்புப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சகோதரர்கள் என தகவல் கிடைத்துள்ளது. 27 வயதான மொஹமட் இப்ராஹிம் மற்றும் 30 வயதான மொஹமட் இப்ராஹிம் சாதிக் ஆகியவர்களாகும்.

அவர்கள் இருவரும் இன்னமும் சுதந்திரமாக சுற்றி திரிவதாக பாதுகாப்பு பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

மாவனெல்லவில் அமைந்துள்ள வீட்டில் வெடிப்பொருட்களுடன் சில மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.