இனிமே சூடா டீ குடிக்காதீங்க! மீறி குடிச்சா இந்த புற்றுநோய் வந்துடுமாம்!வேலையில ரொம்ப டென்ஷனா இருந்தா சட்டென ஞாபகத்துக்கு வருவது டீ தான். ஒரு டீ அடிச்சா எல்லா வகையான டென்ஷனும் பறந்து போய் விடும். இது தான் இன்றைக்கு பலரின் மன நிலையாக உள்ளது.


 சிலர் டீயிற்கு மிக பெரிய அடிமையாகவே இருப்பார்கள். சிலர் டீயை பெரிதும் விரும்பி, ருசித்து ரசித்து குடிப்பார்கள். டீயின் மீது அலாதி பிரியம் கொண்டவர்கள் சில விஷயத்தையும் கவனிச்சே ஆகணும். டீயை சாதாரண வெப்பநிலையை காட்டிலும் அதிக அளவு சூடா குடிப்பது தான் பெரும்பாலும் நமக்கு பிடித்த ஒன்று.


 ஆனால், அவ்வாறு குடிக்கும் போது உடலில் பல்வேறு விதமான பாதிப்புகள் உண்டாகிறது என தற்போதைய ஆராய்ச்சிகள் சொல்கிறது. மிக முக்கியமாக புற்றுநோய் உண்டாகும் என இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இது எதனால் உண்டாகிறது, இதன் உண்மை காரணம் என்ன, இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன... போன்ற பல தகவல்களை இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்வோம். 


டீ காதலர்கள் 


பலவித டீகள் உள்ளன. பலருக்கு டீயின் மீது தனிவித காதலே இருக்கிறது டீயை விரும்பி குடிக்கும் பலருக்கும் அதனால் உண்டாகும் சில விளைவுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். டீயினால் நன்மைகள் ஒருபுறம் உண்டாகினாலும், சில வகையான பாதிப்புகளும் இருக்கின்றன. அதற்கு காரணம் அவற்றின் வெப்ப நிலை தான். 


ஆபத்து


 டீயை 75 டிகிரி செல்சியசுக்கு மேல் குடித்து வந்தால் புற்றுநோய் அபாயம் ஏற்படும். இது வாயிலோ, வயிற்றிலோ புற்றுநோய் செல்களாக உருவாகாது. மாறாக உணவு குழாயில் புற்றுநோய் செல்களை உற்பத்தி செய்யுமாம்.


Powered by Blogger.