மட்டக்களப்பு தற்கொலை குண்டுதாரியின் தாயார் அதிரடியாக கைது!



கடந்த ஞாயிற்று கிழமை மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியவர் புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் அல்லது றில்வான் என ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்தார்.




அவரின் தாயாரே தாக்குதல்தாரியை அடையாளம் காண்பித்துள்ளதாகவும் தாயாரை நேற்று இரவு கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.


மட்டக்களப்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.


நேற்றிரவு புதிய காத்தான்குடி 4ஆம் குறுக்கு ஒழுங்கையிலுள்ள றில்வானின் தாயாரின் வீட்டை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முற்றுகையிட்டு, அவரிடம் தற்கொலை குண்டுதாரியின் ஒளிப்படத்தை காட்டியபோது தாயார் அவரை அடையாளம் காட்டியுள்ளார். அதனை தொடர்ந்து தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


குறித்த குண்டு தாரி கல்முனையில் திருமணம் முடித்துள்ளதாகவும் தெமட்டகொடையில் வசித்துவந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Powered by Blogger.