வெள்ளவத்தையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது


கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் வைத்து வெடிபொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடற்படையினரால் குறித்த நபர்கள் வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.


அத்துடன், அவர்களிடம் இருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.Powered by Blogger.