மட்டக்களப்பு தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகள், நில அபகரிப்புக்கள் தொடருமானால் தற்கொலைப்படைகள் தயாராக இருப்பதாக நாம் திராவிடர் கட்சியின் தலைவர் மோகன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இக் கருத்துக்களை கூறியுள்ளார்.
மோகன் அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்து பிரிந்து சென்று நாம் திராவிடர் கட்சியை உருவாக்கியிருந்தார்.
கடந்த தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டவர்.
இவர் ரணிலின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டு வருபவர் எனும் குற்றச்சாட்டும் உள்ளது.
தமிழ் இளைஞர்கள் தற்கொலைப்படைகளாக உருவெடுத்துள்ளார்கள் என்று இவர் பேசிய விடயத்தின் பின்னணியினை நன்கு ஆராயவேண்டியுள்ளது.
இளைஞர்கள் சமூகம் சார்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்துவரும்நிலையில் இவ்வாறான கருத்துக்கள் இளைஞர்களை உசுப்பேற்றி பலிக்கடாவாக்கும் நிலைக்கும் அப்பால் இராணுவ கெடுபிடிகளுக்கும், கைதுகளுக்கும் வித்திடலாம்.
மறுபுறத்தில் மோகனின் பேச்சு தனது தனிப்பட்ட கருத்தா அல்லது ரணிலின் நிகழ்ச்சி நிரலில் ஒரு அங்கமா?
இளைஞர்கள் விழிப்பாக இருக்கவேண்டும்
மோகனின் பேச்சைக் கேட்க