மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் நியமனத்தில் ஊழல்!



மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பட்டதாரி பயிலுனர்களுக்கான நேர்முக தேர்வு மற்றும் அதன் பின்னர் வழங்கப்பட்ட புள்ளிகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.










பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள பொருளாதார அபிவிருத்தி திட்டமிடல் கொள்கை அமைச்சினால் பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் பயிலுனர்களாக இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு மற்றும் புள்ளி வழங்கள் அதன் பின்னர் நடைபெற்ற நியமனங்களில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் அமைச்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.





மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உள்ளக கணக்காய்வாளர் பகுதியில் நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பட்டதாரிகளுக்கு புள்ளிகள் வழங்குவதில் பாரபட்சம் பார்க்கப்பட்டுள்ளதாகவும் போதிய தகமைகள் இருந்தும் பலருக்கு புள்ளிகள் வழங்குவதில் அநீதி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.





மட்டக்களப்பில் நடைபெற்ற நேர்முகத் தேர்வு முடிவுகள் பலரது வாழ்க்கையில் விளையாடி உள்ளமை தெரியவந்துள்ளது.





உரிய தகமைகள் உள்ள பல பட்டதாரிகளுக்கு உரிய புள்ளிகள் வழங்கப்படாத அதே நேரம் தகமைகள் இல்லாத பலருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு நியமனங்களைப் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.





பழிவாங்கப்பட்ட பட்டதாரிகள்!


குறித்த பட்டதாரிகளின் நேர்முகத் தேர்வில் பட்டதாரிகள் சங்க தலைவர் உட்பட 2012 ஆண்டு சிறப்பு பட்டம் பெற்றவர்களுக்கும் உரிய தகமைகள் இருந்தும் நேர்முக தேர்வு நடத்தியோர் புள்ளிகளை வழங்காது பழிவாங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.





ஒப்பீட்டளவில் நியமன‌ம் வழங்கப்பட்ட பட்டதாரிகளின் தகமைகளையும் வழங்கப்படாத பட்டதாரிகளின் தகமைகளையும் பரீட்சித்துப் பார்க்கும் போது நேர்முகத் தேர்வில் ஊழல் நடந்துள்ளமை வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது.





நீதியாக நடந்த மகிந்த ராஜபக்ச அரசு!


மகிந்த ராஜபக்ச - ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரண்டு அரசிலும் பட்டதாரிகளுக்கு நீதியும் நியாயமானதுமான நியமனங்களை வழங்கியது மகிந்த ராஜபக்ச அரசாங்கமே என்று பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.





ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பட்டதாரிகள் நியமனம் ஊழல் நிறைந்ததாக உள்ளதுடன் பல்கலைக்கழக பட்டம் குறித்த தரத்தினை இல்லாது செய்துள்ளதுடன் பல்கலைக்கழகம் சென்று சிறப்பு பட்டங்களுக்காக கற்கும் மாணவர்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.





அதாவது பல்கலைக்கழகத்திற்கு சென்று சிறப்பு பட்டங்களை பெறுவது இந்த நாட்டில் பெறுமதி அற்றது என்பதை ரணிலின் விக்கிரமசிங்க அரசு பதிவு செய்துள்ளது.





மகிந்த ராஜபக்ச அரசியல் வழங்கப்பட்ட நியமனங்கள் அனைத்தும் பட்டம் பெற்ற ஆண்டு அடிப்படையில் வழங்கப்பட்டதால் அதில் எந்த வித அநீதியோ ஊழலோ நடைபெறவில்லை என பட்டதாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.





ஊழலுக்கு வாய்ப்பளித்த புள்ளி வழங்கும் திட்டம்!


நிதிமோசடி, நிர்வாக சீர்கேடுகள், அதிகார துஸ்பிரயோகம், பாரபட்சம் நிறைந்த மாவட்ட செயலக நிர்வாகத்தை நம்பி பட்டதாரி பயிலுனர்களுக்கான நேர்முகத் தேர்வை நடத்தியதன் ஊடாக அதில் மிகப்பெரும் ஊழல் நடப்பதற்கான சந்தர்ப்பத்தை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.





குறிப்பாக மட்டக்களப்பு போன்ற மாவட்ட செயலகத்தில் ஊழல் நிர்வாகம் முற்றாக ஒழிக்கப்படாத நிலையில். பல்வேறு நிதி மோசடி குற்றச்சாட்டுகள் நிர்வாக சீர்கேடுகள் நிறைந்த அதிகாரிகளிடம் பட்டதாரிகளை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வை நடத்தச் சொன்னால் அவர்கள் எவ்வாறு அதனை நேர்மையாக செய்வார்கள்.





தங்களது உறவுகள், தங்களுக்கு வேண்டியோர், தங்களுக்கு உதவியவர்கள் என பாரபட்சம் பார்த்து புள்ளிகளை வழங்கியுள்ளனர்.





புள்ளி வழங்கும் திட்டத்திற்கு மாறாக புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.





எனவே மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பட்டதாரிகளின் நேர்முகத் தேர்வில் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உண்டு நேர்முகத் தேர்வில் வழங்கப்பட்ட புள்ளிகளையும் ஆவணங்களையும் மீளாய்வு செய்தால் நேர்முகத் தேர்வு நடத்திய பலரது ஊழல்கள் வெளிவர வாய்ப்புள்ளது என பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.





எனவே இதற்கான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.





இழுத்தடிக்கப்பட்ட நேர்முகத் தேர்வு முடிவுகள்!


மாவட்ட செயலகத்திடம் பட்டதாரி நியமனங்கள் வழங்கப்பட முன் பட்டதாரிகள் சங்கம் உட்பட பட்டதாரிகள் பலர் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தங்களது நேர்முகத்தேர்வின் முடிவுகளை தருமாறு கோரிய போதும் அதனை அமைச்சின் அனுமதி இன்ற தரமுடியாது எனக் கூறி மாவட்ட செயலக அதிகாரிகள் இழுத்தடிப்புச் செய்ததுடன் நியமனம் வழங்கப்பட்டு முடிந்த பின்னரே மட்டக்களப்பு மாவட்ட செயலகம் நேர்முகத்தேர்வு முடிவுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.