அகில இலங்கை தமிழ் மொழித்தின தேசிய மட்டப்போட்டியில் காரைதீவு மாணவி முதலிடம்


அகில இலங்கை தமிழ் மொழித்தின தேசிய மட்டப்போட்டியில் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி மாணவி செல்வி ரவீந்திரன் முகுர்தனா முதலிடம் பெற்றுச்சாதனை படைத்துள்ளார்.காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் க.பொ.த உயர்தரம் கணிதப்பிரிவில் பயிலும் செல்வி ர.முகுர்த்தனா பிரிவு 5 இல் தமிழியல் கட்டுரைவரைதல்  இலக்கியநயம் என்ற பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டிகள் கடந்த யூலை மாதம் 14, 15 ,21, 22 ஆகிய தினங்களில் கொழும்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


ர.முகுர்த்தனா  காரைதீவைச்சேர்ந்த க.ரவீந்திரன் ச. யோகேஸ்வரி ஆசிரியதம்பதிகளின் புதல்வியாவார்.


மாணவி.ர.முகுர்த்தனாவின் சாதனையை அதிபர் தி.வித்யாராஜன் ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை கல்விச்சமுகம் பாராட்டியுள்ளது.Powered by Blogger.