7ம் திகதி பூரண ஹர்த்தால், கடையடைப்பு தனிப்பட்ட அரசியலா? சமூக அக்கறையா? மறுபக்கம்!






(காட்டுவாசி)

புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக எதிர்வரும் 7ம் திகதி தமிழ் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாள் கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.









இந்த ஹர்த்தாள் கடையடைப்பு விடயத்தில் பல சந்தேகங்கள். 


இந்த விடயம் தொடர்பில் கடந்த 17ம் திகதி செங்கலடி செல்லம் தியேட்டரில் செல்லம் தியேட்டர் உரிமையாளர் மோகன் அவர்களின் தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.





அக்கூட்டத்தில் பேசிய மோகன் அவர்கள் பல தமிழ் இளைஞர்கள் தற்கொலைப் போராளிகளாக உருவெடுத்துள்ளதாகவும் தங்கள் உயிர்களை மாய்க்க தயாராக இருப்பதாகவும் பேசியிருந்தார்.












இந்த ஒன்றுகூடலினை ஏற்பாடு செய்தவர்கள் யார்? தமிழ் இளையோர் அமைப்பு யார்? இந்த ஹர்த்தாள் கடையடைப்பின் நோக்கம் என்ன?


 இது மோகனின் தனிப்பட்ட அரசியல் நலனுக்கான ஏற்பாடு என்று கூட்டத்திலேயே சலசலப்பு ஏற்பட்டது.









மோகன் குறிப்பிட்ட தற்கொலைப் போராளிகளின் விடயம் தொடர்பின் பின்னணி என்ன? 





மோகன் அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்து பிரிந்து சென்று நாம் திராவிடர் கட்சியை உருவாக்கியிருந்தார்.








கடந்த தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டவர்.


இவர் ரணிலின் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டு வருபவர் எனும் குற்றச்சாட்டும் உள்ளது.


தமிழ் இளைஞர்கள் தற்கொலைப்படைகளாக உருவெடுத்துள்ளார்கள் என்று இவர் பேசிய விடயத்தின் பின்னணியினை நன்கு ஆராயவேண்டியுள்ளது.


இளைஞர்கள் சமூகம் சார்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்துவரும்நிலையில் இவ்வாறான கருத்துக்கள் இளைஞர்களை உசுப்பேற்றி பலிக்கடாவாக்கும் நிலைக்கும் அப்பால் இராணுவ கெடுபிடிகளுக்கும், கைதுகளுக்கும் வித்திடலாம்.





மறுபுறத்தில் மோகனின் பேச்சு தனது தனிப்பட்ட கருத்தா அல்லது ரணிலின் நிகழ்ச்சி நிரலில் ஒரு அங்கமா? இளைஞர்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.


இந்த தண்ணீர் தொழிற்சாலை விடயத்தில் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன அவற்றின் முன்னேற்றங்கள் என்ன? எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டம் கடையடைப்பு என்று மட்டக்களப்பு தமிழர்களின் பொருளாதாரத்தை சுரண்டும் நிலை ஏற்படுத்தப்படுகின்றது.


கடந்த காலங்களில் இடம்பெற்ற இவ்வாறான போராட்டங்கள் எத்தனை தீர்வினை பெற்று தந்துள்ளது? 





போராட்ட வடிவத்தினை மாற்றி தீர்வினை நோக்கி பயணிக்கவேண்டும். இவ்விடயத்தில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.





மாறாக ஹர்த்தாள், கடையடைப்பு என்று தொடர்ந்தால் தீர்வு கிடக்கப்போவதில்லை. மாறாக தமிழர்களின் பொருளாதாரமே வீழ்ச்சியடையும். அன்றையநாள் பல தினக்கூலி தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் மறுநாள் பட்டினியால் வாடும் என்பதே உண்மை.


அரசியல்வாதிகள் தங்கள் அரசியலுக்காக ஏழை கூலி தொழிலாளர்களில் வயிற்றிலடிப்பதை நிறுத்தி தீர்வுக்கான வழிகளை நோக்கி பயணிக்கவேண்டும்.





ஹர்த்தாலுக்கான ஏற்பாடுகளைச் செய்கின்ற மோகன் அவர்கள் பிரதமர் ரணிலுடன் மிக நெருக்கமானவர். இவ்விடயம் தொடர்பில் பிரதமருடன் பேசாமல் இளைஞர்களை உசுப்பேற்றும் செயற்பாட்டில் இறங்குவது ஏன்? 





Powered by Blogger.