நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் அம்பாந்தோட்டை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம்!!

நல்லிணக்கம் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் கலாசார மற்றும் மொழிப் பரிமாற்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அம்பாந்தோட்டை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இன்றைய தினம் (11) திகதி விஜயம் மேற்கொண்டனர்.

அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் பிமல் இந்திரஜித் சில்வா உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் குழுவினர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்திருந்த நிலையில், அவர்களை மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் குழுவினர்  வரவேற்றனர்.

இதன்போது இரு மாவட்ட செயலகங்களுக்கிடையிலான நல்லிணக்கம், அரச நிறுவனங்களின் செயற்பாடுகள், அனுபவப் பகிர்வு மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய பரஸ்பர ஒத்துழைப்புகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இவ்விஜயம் இரு மாவட்டங்களையும் சேர்ந்த அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்ததுடன், அம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய உணவுப் பன்டங்களை அம்பாந்தோட்டை மாவட்ட செயலாளரினால் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபரிற்கு வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.































Powered by Blogger.