மாமாங்கத் தீர்த்தக்கரைத் திருவிழா - கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் பாரம்பரிய அரங்க விழா!!

மட்டு - துஷாரா

மட்டக்களப்பு, மாமாங்கத் தீர்த்தக்கரைத் திருவிழாவை முன்னிட்டு, கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண்டைய கலை வடிவங்களைப் போற்றி வளர்க்கும் நோக்கில் நடைபெறும் இவ்விழாவில், நுண்கலைத் துறை மாணவர்களும் உள்ளூர் அறநெறிப் பாடசாலை மாணவர்களும் இணைந்து பல்வேறு பாரம்பரியக் கூத்து ஆற்றுகைகளை     04 மற்றும் 05 ஆம் திகதிகளில் சிறப்புடன் நடாத்தவுள்ளனர்

நிகழ்ச்சி நிரல் விவரம்

04.08.2026 – செவ்வாய்க்கிழமை மு.ப 10:00 – 11:30 ஆரம்ப விழாவைத் தொடர்ந்து, கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களின் வீரபத்திரர் வசந்தன் கூத்து ஆற்றுகை இடம்பெறும். (இணைப்பாக்கம் திருமதி து. சத்தியஜித்)

பி.ப 05:00 – 07:00 நுண்கலைத்துறை மாணவர்களால் வழங்கப்படும் மகிடிக் கூத்து ஆற்றுகை நடைபெறும். (இணைப்பாக்கம் கலாநிதி சு. சந்திரகுமார்)

 இரவு 09:00 கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் ஆளுமையாள் ஓளவை வடமோடிக் கூத்து அரங்கேறும். (இணைப்பாக்கம்  திருமதி தே. அருட்ஜோதி, திரு. து. கௌரீஸ்வரன்)

 05.08.2026 – புதன்கிழமை

இரவு 09:00 கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்களின் மஞ்சளழகி வடமோடிக் கூத்து ஆற்றுகை இடம்பெறும். (இணைப்பாக்கம் கலாநிதி சு. சந்திரகுமார்)

பாரம்பரியக் கலைகளின் மேன்மையை வெளிப்படுத்தும் இந்நிகழ்வுகளில் கலை ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரையும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்போடு அழைக்கின்றனர்.




Powered by Blogger.