காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் கல்லடி கடற்கரை சுத்தப்படுத்தும் Clean Srilanka வேலைத்திட்டம்!!
காத்தான்குடி பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் உபதேசக்குழுவின் ஏற்பாட்டில் Clean Srilanka வேலைத்திட்டத்தின் கீழ் கல்லடி கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை (11.04.2026) காலை 7.00 மணியில் இருந்து இடம்பெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.என்.அழகக்கோன்(IP) அவர்களின் வழிகாட்டுதலில் இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் பெருமளவான பகுதி சுத்தப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நந்தன(IP), மாவட்ட பொதுமக்கள் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பஸ்நாயக்க(CI), மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார(CI)
சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி ஜெயசேக்கர(SI), பெருங்குற்றபிரிவு பொறுப்பதிகாரி ரஹீம்(SI) மற்றும் பொலிஸ் உபதேசக்குழு செயலாளர் வீ.எம்.பயாஸ் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



.jpg)




