மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் ஹரிமா கழகத்தின் இருபதாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு திருப்பெருந்துறை சந்தியிலுள்ள பாரதியார் சிலைக்கு முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி பேரணியானது மட்டக்களப்பு கல்லடி மணிக் கூட்டுக் கோபுரம் வரை சென்று அங்கிருந்து மீண்டும் மட்டக்களப்பு காந்தி பூங்காவை வந்தடைந்தது.
இந்நிகழ்வானது மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் ஹரிமா கலகத்தின் தலைவர் எஸ்.மனோகிரன் தலைமையில் நடந்தப்பட்டதுடன், குறித்த நிகழ்வினை கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர் சடாற்சரராஜா அவர்கள் திறம்பட நடித்தியிருந்தார்.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 306 D10 லயன்ஸ் கழகத்தின் ஆளுநர் லயன்ஸ் க.லொகேந்திரன் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்விற்கு விசேட அதிதியாக துணை ஆளுநர்களான ஹாகீர் அகமட், ரீ.ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
கழகத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில், மனிதாபிமான அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உலர் உணவுப் பொதிகள் காந்தி பூங்காவில் வைத்தி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.




















