உங்கள் சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டா? நீங்கள் சமூகப்பணியில் அல்லது செயல்முனைவில் (activism) புதிதாக இணைந்துள்ளீர்களா அல்லது ஏற்கனவே அனுபவமுள்ளவரா? இந்த ஒரு வருட தன்னார்வலர் மற்றும் செயற்பாட்டாளர் பயிற்சி திட்டம் உங்கள் தாக்கத்தை வலுப்படுத்தவும், உங்கள் வாய்ப்புகளை விரிவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் புதியவர்களுக்கும் அனுபவமுள்ளவர்களுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து மட்டுமல்லாமல், மற்ற பங்கேற்பாளர்களின் அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த திட்டத்தின் மூலம் நீங்கள்:
* சமூக ஈடுபாடு, பரிந்துரை (advocacy), மற்றும் அமைப்பாற்றல் திறன்களை மேம்படுத்துவீர்கள்
* ஒரு செயற்பாட்டாளராக உங்கள் தலைமைத்துவதிறன் மற்றும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வீர்கள்
* பல்வகை தன்னார்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளை உருவாக்குவீர்கள்
* உங்கள் சமூகத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களை உருவாக்குவீர்கள்
இந்த ஒரு ஆண்டின் முடிவில், நீங்கள் கற்றவராக மட்டும் அல்ல, சமுக செயற்பாடுகளில் தயாரானவராகவும், இணைந்து செயல்பட கூடியவராகவும், சமுக செயலில் ஈடுபடக்கூடியவராகவும் இருப்பீர்கள்.
https://forms.gle/h75Ppaog2TJUji5M7
