(ஷோபிதன்)
மொனாராகலை மாவட்டத்தில் பெருங்காட்டுப்பகுதியில் அமைந்துள்ள புனித கபில்வத்தை முருகன் ஆலய வருடாந்த புனித யாத்திரை கடந்த வெள்ளிக்கிழமை 17 ம் திகதி ஆரம்பமாகியது.
மொனராகலை மாவட்டத்தில் உள்ள பெருங்காட்டுப்பகுதியில் குமுக்கன் ஆற்றங்கரை ஓரமான அமைந்துள்ள இந்த புனித தலம் , கற்பக விருட்சம் என அழைக்கப்படும் புனித புளிய மரம் ஒன்றே அமைந்துள்ளது.
முருகப்பெருமான் தவம் செய்த இடமாகவும் , ரிஷிகளும் , முனிகளும் தவம் செய்ததாகவும் , பல வரலாற்று இதிகாச புராணங்களுடனும் ,. மகாவம்சங்களுடனும் தொடர்புடையதாகவும் நம்பப்படுகிறது.
இப் புனித பயணத்தில் சித்தர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு உலக நன்மை வேண்டியும் யாகங்களும் , சித்த யகாமும், நாத ஒலியில் முருக வழிபாடும், சத்ரு சங்கார யாகமும் , வேல் பூஜை , கபில வன பூஜை , பக்தி பூர்வமாக நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை (17) ஆரம்பமாகிஒஉய புனித கபில்வத்தை பயணம் ஞாயிற்றுக்கிழமை (19) இரவுடன் சிறப்பாக நிறைவுற்றது.
21 நாட்கள் முருகப்பெருமானை நினைத்து விரதமிருந்து இப் புனித பயணம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிங்க மக்களும் , தமிழ் மக்களும் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதும் சிறப்பம்சமாகும்.














