தமிழ் ஈழ வீடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து தேடும் பணி மும்முரம்!!

தமிழ் ஈழ வீடுதலைப்புலிகளின்  ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சுதர்சினியின் உத்தரவிற்கு அமைய காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனை நரசிம்ம வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் பாரியளவிலான தேடுதல் நடவடிக்கைகள் இன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மேற்கொள்ளப்பட்டன.

குறித்த இடத்திற்கு சிறைச்சாலையில் இருந்து சிறைச்சாலை அதிகாரிகளினால் அழைத்து வரப்பட்ட குறித்த வீட்டின் உரிமையாளரான 70 வயது  வயோதிபப் பெண் இடத்தினை உறுதிப்படுத்தியதன் பிரகாரம்  கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபார் வருண ஐயசுந்தர அவர்களின் உத்தரவின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் பிரதிப் களுபாண அவர்களின் வழிகாட்டலில்  மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரட்ணவின் ஆலோசனையின் பேரில் வாழைச்சோனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜறூல் அவர்களின் மேற்பார்வையில JCB இயந்திரத்தினால் தோண்டப்பட்டு  எந்தவித ஆயுதங்களும் மீட்கப்படாத நிலையில் தோண்டப்பட்ட இடம் மீளவும் மூடப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.