சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோயிலில் இன்று காலை விசேட பூசை வழிபாடுகள் இடம் பெற்றது.
ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் தலைமையில் பூசை வழிபாடுகள் இடம் பெற்றது.
குறித்த விசேட பூசை வழிபாடுகளில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் உதவி மேலாளர்களும், இல்ல மாணவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











