ஆசிரியராகும் பணியை உறுதிப்படுத்தி தருமாறு இன்று (03) அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு தபால் நிலையத்திற்கு சென்று உரிய திணைக்களங்களுக்கு எழுத்து மூலமாக சுகயீன விடுமுறை அறிவித்தலை அனுப்பி வைத்துள்ளனர்.
பாடசாலைகளில் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆசிரியர் நியமனத்தை உறுதிப்படுத்தித்தராமல் கடந்த ஐந்து வருடங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர் எனும் நியமணத்தின் ஊடாகவே தாம் கற்பித்தல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் தமக்கு ஆசிரியர் நியமனத்தை வழங்காதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று மட்டக்களப்பில் சுகயீன விடுமுறைப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் குறித்த போராட்டத்தை நாளையும் முன்னெடுக்க போவதாக இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கணேசன் அனீரன் தெரிவித்துள்ளார்.
குறித்த கோரிக்கையினை முன்வைத்து முதலாம் திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






