தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகருக்கு வருபவர்கள் மற்றும் நகரத்திலிருந்து செல்பவர்களின் கண்களைக் கவரும் வகையில் கல்லடி பாலத்தின் இரு முனைகளிலும் தீபாவளியின் கலாசார பண்புகளை வெளிப்படுத்தும் அம்சங்கள் மாநகரசபை ஊழியர்களால் தோரணமாக கட்டமைக்கப்பட்டு இன்று மாலை மின் ஒளியூட்டி திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்களினால் குறித்த தோரணம் மின் ஒளியூட்டி திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர், ஆணையாளர் மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட மாநகர சபையின் ஊழியர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.