கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்றது கல்லடி ஹரி சிறுவர் இல்லம்!!

2025 சர்வதேச சிறுவர் தினத்தை கிழக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் அண்மையில் திருகோணமலையில் நடாத்தியிருந்தது.

இதன்போது சிறுவர் இல்லத் தரப்படுத்தலில் கல்லடி ஹரி சிறுவர் இல்லம் மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றமைக்காக கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.டி.திசாநாயக்கா ஆகியோரால் ஹரி சிறுவர் இல்லத் தலைவர் எஸ்.சந்திரகுமாரிடம் வெற்றிக் கிண்ணம் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

இத்தரப்படுத்தலில் 49 சிறுவர் இல்லங்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Powered by Blogger.