பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால் தமிழரின் முதலமைச்சர் பதவி கேள்விக்குறியாகிவிடும் - இரா.துரைரெட்ணம் ஆதங்கம்!!

பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால் தமிழரின் முதலமைச்சர் பதவி கேள்விக்குறியாகும் என  EPRLF கட்சியின் உப தலைவரும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

EPRLF கட்சியின் உப தலைவரும் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணத்தின் ஊடக சந்திப்பு இன்று (16) திகதி மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழர்களை மக்களின் கைகளுக்கு அதிகாரம் வீடு வீடாக செல்ல வேண்டுமாயின் பல நியதிச் சட்டங்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் 5 நியதிச் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் 70 நியதிச் சட்டங்கள் உருவாக்க வேண்டிய வாய்ப்பு இருக்கின்றது. அந்த நியதிச் சட்டங்களை உருவாக்கும் பட்சத்தில் அதனூடாக பல அதிகாரங்களை மக்களின் காலடிக்கு கொண்டு செல்ல முடியும். 

அந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழர்கள் வாழ்வதால் 37 மாகாண சபை உறுப்புரிமையைக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர்  முதலமைச்சராக வரவேண்டுமானால் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒரு தலைமையின் கீழ் போட்டியிடும் சந்தர்ப்பத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய சூழல் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றது.

கடந்த தேர்தல்களைப் போன்று பிரிந்து கேட்போம் ஆனால் தமிழர்களின் முதலமைச்சர் பதவி கேள்விக்குறியாகிவிடும்.

அவ்வாறு இடம்பெற கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் கட்சிகள் வழி சமைக்காது என நம்புகின்றேன் என கருத்து தெரிவித்திருந்தார்.


Powered by Blogger.