மட்டக்களப்பு மறைமாவட்டத் தவக்கால முயற்சி இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலயக் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்ததிர் நடத்திய இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை 09.03.2025 திருஇருதயநாதர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலயப் பங்குத் தந்தையுமான அருட்பணி சீ.வீ.அன்னதாஸ் அடிளாரரின் தலைமையில் நடைபெற்ற இவ் இரத்ததான முகாமில்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவின் வைத்தியர் சி.விவேகானந்தன் ,இரத்தவங்கி ஊழியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது இருதயபுரம் கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் இருதயபுரம் பங்குமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்இரத்ததான முகாம் கடந்த 16 வருட காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.