இறக்காமம் அஸ்ரப் தேசிய பாடசாலை சமூக விஞ்ஞானப் போட்டியில் சாதனை!

(இறக்காமம் எஸ்.எல்.நிசார்)

கடந்த ஆண்டு ( 2024) நடை பெற்ற அகில இலங்கை சமூக விஞ்ஞானப் போட்டியில் இறக்காமம் அஸ்ரப் தேசிய பாடசாலை மாணவர்கள் முறையே 3ஆம்,4ஆம் நிலைகளைக் பெற்று சாதனை பண்டைத்துள்ளனர்.

கல்வி அமைச்சின் 2012/20ஆம் சுற்றுநிருபத்திற்கமைவாக மானுடவியல் மற்றும் சமூக விஞ்ஞானப் பிரிவின் வழிநடாத்தலில் நாடுமுழுவதும் பரவலான வகையில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் நடாத்தப்படுகினறமை குறிப்பிடத் தக்கதாகும்.

சமூக விஞ்ஞானப் பாடங்களாக வரலாறு, குடியியல், புவியியல் போன்ற பாடங்களோடு இணைந்ததாக சமகாலத்தகவல்கள் தொடர்பாக ஆசிரியர்களையும், மாணவர்களினதும். ஈடுபாட்டை விருத்தியடையச் செய்யும் நோக்கில் நாடாளவியரீதியில் நடைபெற்ற இப்போட்டியில் இறக்காமம் அஸ்ரப் தேசிய பாடசாலை மாணவர்களான ஏ.டபிள்யூ.பாத்திஃ, ஆர்.எம்.ஆயிஷா, எம்.கே.எம்.யூசுப்சயான் ஆகிய மாணவர்கள் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை பெற்றுத்தந்துள்ளனர்.




Powered by Blogger.