தற்போது நிலவுகின்ற காலநிலையினால் சியம்பலாண்டுவ பகுதியில் அதிக மழைப்பொழிவு காணப்படுவதாக அறியக்கிடைக்கப் பெற்றுள்ளது.
இதனால் நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகின்ற ஒரு நிலை காணப்படுவதால் பொத்துவில் நாவலூறு, இறத்தல், ஹெட ஓயா போன்ற ஆற்றோரங்களில் காணப்படுகின்ற பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய களநிலவரம் காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, இவ்வாறான பிரதேசங்களில் உள்ளவர்களை அவதானமாக இருக்குமாறும் பிரதேசங்களுக்கு செல்வதற்கு எத்தனிப்பவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுளளது.