ஏற்கனவே காணப்பட்ட இரண்டாவது காற்று சுழற்சியானது வடக்காக நகர்ந்து, வட தமிழகம் வரை சென்று, அது தனது திசையை மீண்டும் மாற்றி ( U turn) எதிர்வரும் 22ஆம் திகதியளவில் தெற்கு நோக்கி நகர்ந்து, மீண்டும் அது எதிர்வரும் 23ஆம் திகதியளவில் மேற்கு நோக்கி தமிழ்நாட்டிற்கும் வட இலங்கைக்கும் ஊடாக (23ஆம், 24ஆம் திகதி அளவில்) நகர்ந்து அரபிய கடல் பகுதிக்கு செல்லும்.
அதேவேளை அடுத்த காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து எதிர்வரும் 21ஆம் 22ஆம் திகதியளவில் இலங்கையின் தெற்குகாக வந்து,
தற்போது தென்சீனக் கடல் வழியாக, தாய்லாந்து வழியாக வந்து கொண்டிருக்கும் புதிய காற்று சுழற்சியுடன் இந்த காற்று சுழற்சியானது எதிர்வரும் 25ஆம் 26ஆம் திகதி அளவில் ஒன்றாக இணைந்து,
எதிர்வரும் 27ஆம் திகதியளவில் இலங்கைக்கு நெருக்கமாக வந்து எதிர்வரும் 28ஆம் திகதியளவில் தமிழ்நாட்டின் கரையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த காற்று சுழற்சிகள் யாவும் இலங்கைக்கு அப்பால் சென்று தமிழ்நாட்டை சென்றடைவதனால் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளுக்கு இதன் தாக்கத்தினால் பெரியளவு மழை வீழ்ச்சிக்கான சாத்தியக்கூறு மிக மிக குறைவாகவே தற்போது உள்ள வானிலை அமைப்பின்படி காணப்படுகின்றது.