சமாதான நீதிவான்களுக்கான கருத்தரங்கும் பொதுக் கூட்டமும் நாளை 2024/11/30ந் திகதி சனிக்கிழமை நடைபெற இருந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாகவும் அனேகமானோரின் வழிப் பாதைகள் வெள்ளத்தினால் தடைப்பட்டதன் காரணமாகவும் ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
இக் கூட்டத்திற்கு தங்கள் வருகையை உறுதிப்படுத்திய அனைவருக்கும் இக் கூட்டம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நிருவாகத்தினர் அன்புடன் அறியத்தருகின்றனர்.