பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி - மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஐஸ்டினா முரளிதரன்!!

எதிர்வரும் 14 திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான ஐஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான ஊடக சந்திப்பு இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் இடம் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 449,686 வாக்களிக்க தகமை பெற்றுள்ளனர். இதில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 14,003 பேர் தகமை பெற்று வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் யாவும் நடைபெற்று முடிந்துள்ளதுடன், இம்முறை 6750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

442 வாக்களிப்பு நிலையங்களில்  தேர்தல் வாக்களிப்புக்கள் இடம்பெறவுள்ள நிலையில் வாக்கெண்னும் நிலையம் இம்முறை மட்டக்களப்பு இந்து கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 46 வாக்கெண்னும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்காக 09 நிலையங்களும், ஏனைய வாக்குகளை எண்ணுவதற்காக 37 நிலையங்களும் ஒழுங்குபடுத்தப்பட் டுள்ளன.

வாக்காளர் அட்டைகள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் யாவும் தேர்தல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளன.

இது வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காத மக்கள் தங்களுடைய பிரதேசத்திற்குரிய தபால் நிலையங்களுக்கு சென்று அந்த அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும். இது வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 218 தேர்தல் விதி மீறல்கள் நடைபெறவுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.விளையாட்டு

அதே வேளை பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மாவட்டத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.



Powered by Blogger.